சோளம் மற்றும் கிளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

<!–

சோளம் மற்றும் கிளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி – Athavan News

கால்நடை தீவனம் தயாரிப்பதற்காக 25,000 மெட்ரிக் தொன் சோளம் அல்லது பொருத்தமான தானியங்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெரும் போகத்திற்கான அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்காகவும் 06 மாத காலத்திற்கு கிளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதிக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply