மைத்திரியை சுடச் சென்ற அமி சுரங்க கைது!!

முல்லேரிய வல்பொல பிரதேசத்தில் நேற்று இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

ரஞ்சிலு பேடியின் புத்திக பிரசாத் எனப்படும் அமி சுரங்க மற்றும் சாமர சதுரங்க ஆகிய இரு பாதாள உலக உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமி சுரங்க என்ற நபர், பாதாள உலகக் குழுத் தலைவரான உரு ஜுவா மற்றும் கோத்தா அசங்க குழுவைச் சேர்ந்த தனுஷ்க ஆரியவன்ச என்றழைக்கப்படும் ரங்கா ஆகியோரின் சகோதரரும் கூட என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் இதற்கு முன்னரும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், 2014ஆம் ஆண்டு வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமாகலியா விளையாட்டரங்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேடை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹிம்புதான கொடௌட வீதி மற்றும் கடுவெல மேல் பொமிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் முல்லேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply