மன்னாரில் 160 கிலோ கஞ்சா மீட்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வந்ததாக கருதப்படும் 160 கிலோ கேரளக் கஞ்சா இன்று காலை மன்னாரில் பிடிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பகுதியில் பட்டா வாகனத்தில் கடத்திச் செல்வதாக பொலிஸாரின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இன்று காலை கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கடத்திய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply