
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியில் நான்கு வீடுகள் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது .
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நவராத்திரியை முன்னிட்டு ஆலயத்துக்காகக் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகளை மதுபோதையில் சென்ற இருவர் உடைத்த நிலையில் , அவர்களைக் குறித்த பிரதேச இளைஞர்கள் பிடித்து எச்சரித்து அனுப்பினர் .
இந்த நிலையில் , நேற்று அதிகாலை 2 மணியளவில் வந்த ஆறு பேரைக் கொண்ட குழு அந்தப் பகுதியிலுள்ள நான்கு வீடுகள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது .
இது தொடர் பில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிற செய்திகள்



