கிராம அமைப்புக்களின் பங்களிப்பில் பொதுநோக்கு மண்டபம் திறந்து வைப்பு!

வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் பொது நோக்கு மண்டபம் புனரமைக்கபப்பட்டு நேற்றையதினம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பாரதிபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட அகில இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவரும், பிரதேச சபை உறுப்பினருமான இராசையா விக்டர்ராஜ் மற்றும் ஏனைய விருந்தினர்களால் பொதுநோக்கு மண்டபம் உத்தியோக பூர்வமாக நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் பிரதேசசபை தலைவர் த,யோகராசா, கிராம உத்தியோகத்தர், பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாடு பொருளாதார ரீதியில் தடுமாறும் இந்த நேரத்திலும் கிராம அமைப்பானது எவரது பங்களிப்பும் இல்லாமல் இப்படியான விடயத்தினை செய்திருப்பது உண்மையில் பெருமைப்பட வேண்டிய விடயம் என இளைஞர் முன்னணியின் தலைவர் தெரிவித்ததுடன்,சீரற்று காணப்படும் வீதிகளை செப்பனிடுவதற்கு பிரதேச சபையானது வாகனங்களை தந்துதவுமாறு இருந்தால் அதற்கான எரிபொருளை நாங்கள் பெற்றுக்கொடுத்து அதனை செயற்படுத்த தாயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply