மொட்டு கட்சியின் பிடியில் இருக்கும் ரணில் ஒரு பலவீனமான ஜனாதிபதி- சி.வி.கே சிவஞானம் சாடல்!

ரணிலின் காலினை மொட்டு கட்சி சுற்றி விட்டது .இனி அவரால் வெளியில் வர முடியாது.அவர் கெட்டிக்காரனாக இருக்கலாம் ஆனால் அவர் ஒரு பலவீனமான ஜனாதிபதி என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி கே சிவஞானம் தெரிவித்தார்.

சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ரணில் தொடர்பில் ஐக்கிய கட்சியினுள்ளே மன வருத்தம் தொடங்கி விட்டது. மொட்டுக் கட்சியினை திருப்தி படுத்தாமல் விட்டால் இருக்க முடியாது என்று எச்சரித்து ரணிலினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.ஆகவே இங்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை .

ஆறு மாதங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பேன் என ரணில் கூறியிருந்தார். இது நடக்கவே நடக்காது ,இந்த அரசாங்கம் எங்களுக்கு ஒன்றும் செய்யாது .இது தவிர தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிவு எனக்கு திருப்தி அடையவில்லை.

சிறிதளவு புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டாலும்,பழைய விடயங்கள் பின் தள்ளப்பட்டது போலதான் இருக்கின்றது .என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply