வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொது நோக்கு மண்டபம் புனரமைக்கப்பட்டு மக்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் யோகராசா மற்றும் அகில இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவர் இராசையா விக்டர் ராஜ் ஆகியோரும் மேலும் அப்பகுதி கிராம சேவையாளர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள இவ் நேரத்தில் அரச நிதியினை வீண்விரயம் செய்து புதிய கட்டிடம் அமைப்பதற்கு பதிலாக முன்னர் இருந்த கட்டிடத்தினையே வினைத்திறனான முறையில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அரச செலவினை கட்டுப்படுத்தி இவ் கட்டிடம் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
பிற செய்திகள்



