
சிறார்களிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளமையினால், அவர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்தார்.
குறிப்பாக இணையம் ஊடான கற்கையின்போது, பெற்றோர்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடான விளையாட்டுக்கள் என்பனவற்றின் பாவனை, சிறுவர்கள் இடையே அதிகரிப்பதாகவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்தார்.
இதேவேளை, அவ்வாறான செயல்பாடுகள் காரணமாக சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிறுவர்கள் இடையே இணைய அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்தார்.
பிற செய்திகள்



