
நாட்டில் தற்போது அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் இ்டம்பெற்றுவருகின்றன.
இவ்வாறான நிலையில் புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் நாடு திரும்பியுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.
அத்துடன், ஜப்பானிய பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்து பேசியிருந்தார்.
அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிலிப்பைன்ஸிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிற செய்திகள்





