குறைந்தது பெட்ரோல் விலை: முழு விபரம் இணைப்பு

கொழும்பு,ஓக் 02

சனிக்கிழமை(ஒக்.01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், பெட்ரோல்  விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலையை 40 ரூபாவாலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல்  ஒரு லிட்டரின்  விலையை 30 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் புதிய விலையாக 410 ரூபாவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல்  ஒரு லிட்டரின் புதிய விலையாக 510 ரூபாவும் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை மாற்றத்திற்கு ஏற்ப, தமது நிறுவனமும் பெட்ரோலின் விலையை குறைத்துள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply