திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் உள்ள மத்திய கல்லூரி வீதியின் புனர்நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக தோப்பூர் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
560 மீற்றர் தூரமுள்ள இவ்வீதியை புனரமைக்க 2019 ஆம் ஆண்டு ரண்மாவத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று இடைநடுவில் கைவிடப்பட்டது.
இடைநடுவில் கைவிடப்பட்ட அல்ஹம்றா மத்திய கல்லூரி வீதியை புனரமைக்க ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தில் மீண்டும் 2021 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு வீதி புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வந்த நிலையில் மீண்டும் இரண்டாவது தடவையாகவும் வீதி புனர்நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்படாது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இவ்வீதிக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்ட வீதி புனரமைப்பு வேலைகள் இதுவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்தோடு இவ்வீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவ்வீதியால் தினந்தோரும் மாணவர்கள், பொதுமக்கள் பிராயாணம் செய்கின்றனர்.இவ்வீதியின் வேலைகள் பூர்த்தி செய்யப்படாமையால் அசௌகரியங்களுடனே பயணிப்பதாகவும் கவலை தெ ரிவிக்கின்றனர்.
எனவே வீதி புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள மத்திய கல்லூரி வீதியை புனரமைப்புச் செய்துதர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தோப்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்



