
கம்பஹா – மீரிகம,தங்ஹோவிட பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்த பெந்தோட்ட – ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இரேஷா ஷியாமலி என்ற பட்டதாரியான பெண் ,சுற்றுலாத்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றுள்ளதுடன், இந்துருவாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தற்போது முகாமையாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிற செய்திகள்



