சேறு பூசும் தொழிற்சாலையை இயக்கி வரும் மஹிந்த- சஜித் குற்றச்சாட்டு!

தற்போது ராஜபக்ச சேறு பூசும் தொழிற்சாலை இயங்கி வருவதாகவும் , அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய கலாசார நிதியம் மீது போலியான சேறு பூசிக்கொண்டிருப்பதாகவும் , இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு தாம் ஒருபோதும் சளைக்கப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார் .

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹினிதும தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று எதிர்க்கட்சி த் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது . இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ,

இங்கு மேலும் பேசுகையில் , மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் பிரகாரம்செயற்பட்டதே தாம் செய்த ஒரே தவறு எனவும் , அதன் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டவை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் , இது தொடர்பான அனைத்துத் திட்டங்களும் நிர்மாணங்களும் அரச நிறுவ னங்களைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் .

எதிர்க்கட்சியில் இருந்த வண் ணம் சுகாதார உபகரணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பேரூந்துகள் என்பன எவ்வாறு வழங்கப்படுகின்றன என சில எதிர்தரப்பினர் கேள்வி எழுப்பு வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் , வெளிப்படைத்தன்மையுடனும் , நேர்மையுடனும் , மனசாட்சியுடனும் பணிபுரியும் எந்தவொருவருக்கும் நன்கொடை வழங்கக்கூடிய நன்கொடையாளர்கள் இருப்ப தாகவும் அவர் தெரிவித்தார் .

ஜனாதிபதி வெளிநாட்டிலி ருந்து வந்தவுடனயே உயர் பாதுகாப்பு வலயம் தொடர் பான வர்த்தமானி மீளப்பெ றப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் , அதே போன்றே பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காலாவதியான முறைமை களிலிருந்து விடுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் , சர்வதேச சமூகத்துடன் ஈடுபடக்கூடிய இளம் தலைமுறையை உருவாக்குவது அவசியம் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply