
யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோட்டை பகுதியை இன்று பார்வையிட்ட மாநகர முதல்வர், அங்கு இடம்பெற்றுவரும் அநாகரிக செயற்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் நேரடியாக அதனை அவதானித்தார்.
இதன் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் வி.மணிவண்ணன், அவர்களை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
கோட்டை பகுதியை சுற்றியுள்ள பற்றைக் காடுகளை அகற்ற நீதிபதிகள் வேண்டுகோள்விடுத்த நிலையில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.



