மூத்த பிரஜைகளுக்கான விசேட வட்டித் திட்டம் ரத்து

மூத்த பிர­ஜை­க­ளுக்­கான விசேட நிலை­யான வைப்பு வட்டி திட்­டம் நேற்­று­முன்­தி­னம் முதல் உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரும் வகை­யில் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக இலங்கை மத்­திய வங்கி அறி­வுறுத்­தி­யுள்­ளது.

மூத்த பிர­ஜை­க­ளுக்­கான விசேட நிலுவை வைப்பு மற்­றும் புதுப்­பித்­தல் செயற்­பா­டு­களை ஏற்­றுக்­கொள்ள வேண்­டாம் என்று இலங்கை மத்­திய வங்­கி­யால் வர்த்­தக வங்­கி­க­ளுக்கு பணிப்­புரை வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி அமைச்­ச­ரவை தீர்­மா­னத்­துக்கு அமைய, உரிய பணிப்­பு­ரை­கள் இலங்கை மத்­திய வங்­கி­யால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

முன்­ன­தாக 60 வய­துக்கு மேற்­பட்ட மூத்த பிர­ஜை­க­ளுக்கு நிலை­யான வைப்­பா­ளர்­க­ளுக்கு 14.5 சத­வீ­த­மான வட்டி வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யில் தற்­பொ­ழுது 15 சத வீத வட்டி வழங்­கப்­பட்­டது.

Leave a Reply