வீடியோ உரையாடல்; மாணவியை மிரட்டி துஷ்பிரயோகம்

வலி­கா­மம் வல­யத்­துக்கு உட்­பட்ட பாட­சாலை ஒன்­றில் கல்வி பயி­லும் 15 வயது மாண­வி­யின் வீடியோ உரை­யா­டலை பதிவு செய்து, அதை­வைத்து மிரட்டி, அவரை பாலி­யல் துஷ்­பி­ர­யோ­கம் செய்த குற்­றச்­சாட்­டில் ஏழா­லை­யைச் சேர்ந்த 20 மற்­றும் 25 வயது இளை­ஞர்­கள் சுன்­னா­கம் பொலிஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மாண­வி­யு­டன் இளை­ஞன் ஒரு­வன் வீடி­யோ­வில் உரை­யா­டலை சில மாதங்­க­ளுக்கு முன்­னர் மேற்­கொண்­டுள்­ளான். இதன்­போது அந்த உரை­யா­டலை பதிவு செய்­துள்­ளான். மாணவி துவா­யு­டன் இருக்­கும் அந்த உரை­யா­டல் பதிவை தனது உற­வி­ன­ரான இன்­னொரு இளை­ஞ­னுக்­கும்­அ­வன் அனுப்­பி­யுள்­ளான்.

அவ்­வாறு தனது நண்­ப­னின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனை­யோ­ருக்­கும் அனுப்ப உள்­ள­தாக மிரட்டி மாண­வியை அந்த இளை­ஞன் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளான். அதே­வேளை இந்த வீடியோ பதிவு பல இடங்­க­ளி­லும் பகி­ரப்­பட்­டுள்­ளது.

மாணவி கல்வி கற்­கும் பாட­சா­லைச் சமூ­கத்­துக்கு இந்த விட­யம் தெரி­ய­வந்­த­தைத் தொடர்ந்து ஆசி­ரி­யர்­க­ளால் சிறு­வர் நன்­ன­டத்தை உத்­தி­யோ­கத்­தர்­கள் ஊடாக பொலிஸ் நிலை­யத்­துக்கு இது குறித்து தக­வல் வழங்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து வீடியோ பதிவு செய்த இளை­ஞ­னும், அத­னைப் பயன்­ப­டுத்தி மாண­வியை பாலி­யல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய இளை­ஞ­னும் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

Leave a Reply