தொடந்து மலையக தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி வந்தலோ, அவர்களின் உரிமைகளை மறுத்தலோ பாரிய போராட்டங்களை அரசும், தோட்ட நிர்வாகமும் சந்திக்க நேரிடும். அது சாதாரண போராட்டமாக மட்டும் அமையாது அரகல போராட்டமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் மலையக தோட்டம் தொழிலார்களை பற்றி கூறும் போது,
இலங்கையில் இருக்கக்கூடிய மக்களில் மிகவும் பின்தங்கிய, நீர்கதியான மக்கள் மலையக மக்கள்தான் என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாகதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதிக சுமைகளை சுமக்கும் பெண்கள், அதிகமான போசாக்கு இன்மை, சுகாதார சீர் கேடுகள், மோசமான தொழில் நிலைமைகள், சுருக்கமாக மலையக மக்கள் நவீன கொத்தடிமைகள் என்று அடையாள படுத்தியிருக்கிறனர்.
எமது கூட்டணியும் ஐ.நா மன்றுக்கு இது தொடர்பாக கடிதங்களை அனுப்பியிருக்கின்றது. எனவே தோட்ட மக்களை ஏமாற்றாது உரிய ஊதியத்தையும் உரிமையையும் வழங்க வேண்டும், இல்லை என்றால் எதிர்கலத்தில் பாரிய அளவில் அரகல போராட்டமாக வெடிக்கும் என்று மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிற செய்திகள்



