அபிவிருத்தியடைந்துவந்த நாட்டை போராட்டக்காரர்களே நாசமாக்கினர்! – அமைச்சர் பிரசன்ன

மிக வேகமாக அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரமும் சமூகமும் போராட்டக்காரர்கள் எனப்படுபவர்களால் நாசமாக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை அழித்த போராட்டக்காரர்களே இந்த பொருளாதார அழிவுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

மேலும், கடந்த அரசாங்கத்தின்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து திட்டங்களும் கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா யுக்ரைன் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply