ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

<!–

ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி – Athavan News

பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாடசாலை மதிய உணவு திட்டத்தை  விரிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான நிதியை வெளிநாட்டு மானியங்கள் மூலம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பூரண சத்தான உணவை வழங்கும் வகையில் 7,926 பாடசாலைகளில் உள்ள 1.08 மில்லியன் மாணவர்கள் இத்திட்டத்தின் இலக்காக உள்ளனர்.

வருடாந்தம் 4 பில்லியன் ரூபாய் செலவில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.


Leave a Reply