இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை, சிங்கப்பூரில் சந்தித்து அவருடன் தாம் மதிய உணவை உட்கொண்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
ஜ0னாதிபதி, ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டபோது, சிங்கப்பூரில் வைத்து அர்ஜுன் மகேந்திரனுடன் மதிய உணவை உட்கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் அர்ஜுன் மகேந்திரனுடன் சிங்கப்பூரில் மதிய உணவு உட்கொண்டதாக பெயர் குறிப்பிட்டு நாடாளுமன்றில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
நான் காலை வேளையில் அந்த நாட்டு, அமைச்சர் ஒருவருடன் உணவை உட்கொண்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மதிய உணவினை சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வைத்து உட்கொண்டதாகவும், அதற்கான உணவுப்பட்டியலையும் தான் காண்பிக்க தயார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிற செய்திகள்