
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (05) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
450 கிராம் உள்ளூர் பால்மா பொதி 125 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.
அதன்படி,850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால்மா பொதி 975 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றில் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது
அதன் புதிய விலை 950 ரூபாவாகும்.
அதேவேளை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முழு ஆடைப் பால்மா கிலோவொன்றில் விலை 230 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,350 ரூபாவாகும்.





