50 கிலோ எடையுடைய சிமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவால் குறைக்க அதன் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விலை குறைப்பு இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதன்படி 3,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்று, 3,100 ரூபாவாக விலை குறைக்கப்படவுள்ளது.
கட்டட நிர்மாணத்துறையை முன்கொண்டு செல்லும் நோக்கில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.