மீளப்பெறப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தங்கங்களை ,மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து,அரசுக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி இச். இஸ்மாயில், சிரெஸ்ட சட்டத்தரணி ஜீப்ரியா இர்ஷாட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி கல்வி வெளியீட்டு திணைகள் ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைவாக 6,7,10,11,ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தக விநியோகம் நிறுத்தப்பட்டது.ஏற்கனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் பாடப்புத்தகமும் மீளப் பெறப்பட்டது.
சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய காரணத்தால் ,அதனை நிறைவு செய்த பின்னர்,மீண்டும் புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.தற்போது 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னமும் இஸ்லாம் புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை.
இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிலும் இஸ்லாம் பாடத்தை கட்டாயமாக கற்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆகவே இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளோம்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் க.பொ.த சாதாரண பரீட்சைகள் நடைபெறவுள்ளது.அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்.ஆகவே இதற்கான நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்து,ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்