சுயபாதுகாப்பை கருத்தில் கொண்டு அனுமதி பத்திரத்திரத்துடன் கைதுப்பாக்கியை வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கு தம் வசம் கைத்துப்பாக்கியை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமாயின் அனுமதி பத்திரத்திரத்தினை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அனுமதிபத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுயபாதுகாப்பு உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கிக்குரிய அனுமதி பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பான மேலதிக விபரங்களை www.defence.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் கைத்துப்பாக்கியை தம்வசம் வைத்திருப்பதற்கான அனுமதி பத்திரத்தினை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் பதிவு செய்யாதவர்கள் தண்டனைக்குரியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்