தொடரூந்து ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் தொடருந்து சேவைக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சரக்குகளை ஏற்றிச்செல்லும் தொடரூந்து, வெல்லவ பகுதியில் நேற்றிரவு தடம்புரண்டது.
இதன் காரணமாக, காங்கேசன்துறை முதல் கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த தொடருந்து சேவை, மஹவ தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், கொழும்பு – கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி பயணிகத்த தொடரூந்து சேவை குருநாகல் வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வடக்கு தொடரூந்து சேவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்