கொழும்பு, ஓக.05
22 ஆம் திருத்தச் சட்ட வரைவு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கப்பாடில்லா தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
எனினும் அதன் சில உள்ளடக்கங்கள் அரசியல் யாப்புக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கி இருந்த நிலையில், அதன் அடிப்படையில் இந்த சட்டமூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யாமல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கு அல்லது ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதற்கு இணங்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.