16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல்: மன்னார் மாணவன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!

<!–

16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல்: மன்னார் மாணவன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு! – Athavan News

மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.விஜய், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தலில் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று, தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானார்.

பயிற்றுவிப்பாளர் திரு.ஆ.கு.ரொசேன் செரூபா பீரிஸ், பாடசாலையின் அதிபர் வு.ஆனந்தன் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர், தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவன் சி.விஜய் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Leave a Reply