
நாட்டில் தற்போது தோன்றியிருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது கூடுதலாக நாட்டு மக்களை பாதித்திருக்கின்றது.இந்த பாதகமான நிலைமைக்கு முக்கியமான காரணமாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவார் என ஜே.வி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விஷேடமாக இரசாயன உரத்திற்கு தடை ஏற்பட்டதன் காரணமாக முழு நாடுமே ஸ்தம்பித நிலைக்கு ,விவசாயிகளின் வாழ்க்கை கூண்டோடு அழைக்கப்படுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது.
பல பொருட்களுக்கான அதிக விலை விதிப்பின் காரணமாக மக்கள் பலவிதமான இன்னல்களை எதிர்கொண்டிருந்தனர்.
இவ்வாறான நிலைமையில் இன்று நாம் தேடிப்பார்க்கின்ற பொழுது நாட்டு மக்கள் மீது, ஏனைய துறை சார்ந்தோர் மீது அக்கறை செலுத்தாத நபரின் செயற்பாடாகவே இந்த ரணில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.இது முட்டாள்தனமான செயற்பாடாகவே காணப்படுகின்றன.
விலைவாசியின் அதிகரிப்பு காரணமாக ,தங்காளால் வாழ முடியாத மிக நெருக்கடியான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாட்டில் உள்ள அனைவரும் இந்த நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு பிரதானமான காரணகர்த்தாவாக இருந்தவர்கள் வேற யாரும் அல்ல ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் தூர நோக்கற்ற செயற்பாடாகும் . இன்று பல பொருட்களுக்கான தடை விதிக்கபப்ட்டிருக்கின்றன.
இறக்குமதி செய்வதற்கான செய்வதற்கான தடை,கொண்டு செல்வதற்கான தடை .இந்த தடைக்கு உள்ளாகி இருப்பவர்கள் வேறு யாரும் அல்ல ,இந்த நாட்டின் 40 இலட்சத்துக்கு அதிகமான மாணவ பரம்பரையாகும்.
எங்கள் பிள்ளைக்களுக்காக இறக்குமதி செய்யப்படும் அப்பியாச புத்தகங்கள் ,பேனாக்கள் ,பென்சிகள்,சப்பாத்துக்கள் போன்ற அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.போன்களுக்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான நிலைமைகள் மூலமாக இந்த ரணில் விக்கரமசிங்கவின் செயற்பாட்டிலும் ,கோட்டாவின் செயற்பாட்டிலும் எந்தவிதமான வித்தியாசத்தையும் எங்களால் காண முடையவில்லை.
80 இலட்சத்துக்கு அதிகமான விவசாயிகளுடைய வயிற்றில் அடித்து ,நடு வீதியில் இழுத்து நிறுத்தினார்.
இதனால் நாடு முழுவதும் பட்னி சாவினை எதிர்கொண்டிருக்கிறது. நாட்டில் இருக்கின்ற புத்திஜீவிகள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது என்னவெனில் எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கையினை நாசமாக்குகின்ற ,கல்வி நடவடிக்கைளை சிதைக்கின்ற ,பாடசாலை உபகாரணங்களின் விலையினை அதிகரிக்கின்ற அரசாங்கத்திடம் உடனடியாக இவைகளின் விலைகளை குறையுங்கள் என்றதனை கேட்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.இதனை கேட்க மாட்டார்கள் என தெரிய வருகிறது.
இவ்வாறு நாங்கள் சொல்வதை கேட்காவிடின் இந்த நாட்டினுடைய இறைமையினை,அதிகாரத்தினை மக்கள் கையில் எடுத்து நிச்சயமாக,வெகு சீக்கிரத்தில் இந்த அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் .
மின்சார கட்டணத்தின் அதிகரிப்பால் மக்கள் தலையில் இடி விழுந்தது போன்று இருக்கிறார்கள். வரி அதிக்கின்ற பொழுது வியாபாரிகள் பொருட்களின் விலைகளை அதிகரிப்பார்கள் .
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பது போன்று மீண்டும் இந்த மக்களை மக்களை மிதிக்கின்ற அப்பாவித்தனமான நடவடிக்கைளை ஏன் இந்த ரணில் ராஜபக்ஷ எடுத்து வருகின்றார்.
இதனை தடுத்து நிறுத்த வேண்டும் ,தடுத்து நிறுத்துவதற்காக,மக்கள் ஆணையில்லாத ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புகின்ற ,அதே போன்று புதிய தேர்தலுக்கான களத்தை உருவாக்குக்கின்ற அழுத்தத்தை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடாகும். என்றார்.
பிற செய்திகள்



