
பாவனைக்கு உதவாத அரிசியை இரவு நேர உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கும் வர்த்தகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேருவளை காவல்துறை மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது இந்த சட்டவிரோத வர்த்தகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாவனைக்கு உதவாத அரிசி பேருவளை மற்றும் தர்காநகரில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, குறித்த களஞ்சியசாலைகள் காவல்துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்றிரவு சுற்றி வளைக்கப்பட்டுள்ளன
இதன்போது, பாவனைக்கு உதவாத 16 ஆயிரம் கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த அரிசி வெல்லம்பிட்டி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்



