யாழில் அடங்கமறுக்கும் போதைப்பொருள் பாவனை: களத்தில் இறங்கிய சுகாதாரத் தரப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது .

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் போதைப் பொருள் பாவனை கட்டுப்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடலிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த ஜனவரி மாதம் 100 மாணவர்களுக்கு 5 மாணவர்கள் உயிர்கொல்லி போதைப் பொருள் பயன்படுத்துவதாகக் கணிப்பிடப்பட்டிருந்தது . அது தற்போது 100 மாணவர்களுக்கு 7 அல்லது 8 மாணவர்கள் என்ற அடிப்படையில் உயர்ந்துள்ளதாக மருத்துவத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர் .

ஆனாலும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த கல்வித் திணைக்களப் பிரதிநிதி , 100 மாணவர்களுக்கு ஒரு மாணவர் என்ற அடிப்படையிலேயே போதைப் பொருளுக்கு மாணவர்கள் அடிமையாகி உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் .

யாழ் . மாவட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்தாது வடக்கு மாகாணம் முழுவதி லுமாக நடவடிக்கை எடுப்பது தொடர்பி லும் நேற்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது .

நாளை வெள்ளிக்கிழமை மீளவும் விசேட கூட்டம் ஒன்று இது தொடர்பில் இடம்பெறவுள்ளது .

அதன் பின்னர் பாடசாலைகளில் தொடர் விழிப்புணர்வு பயிற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

பிற செய்திகள்

Leave a Reply