22ஆவது சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு; பிரதமருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இறுதி நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து விரைவில் அறிவிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற குழு ஒரு கருத்தையும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் மற்றொரு கருத்தையும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளன.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முதன்முதலில் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாற்றமான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Leave a Reply