யாழில் பேருந்து சேவைகள் முடங்கும் நிலை!

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைசாலை பணியாளர்கள் தமது கோரிக்கைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னர் நிறைவேற்றாவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர் .

நிர்வாகத்தை குழப்பும் பணியாளர்களை இடமாற்றம் செய்யவேண்டும் ,சாலை முகாமையாளரை சாலையில் கடமையாற்றவிட வேண்டும், உதவி முகாமையாளரை எந்தவித அழுத்தமும் இன்றி கடமையாற்றவிட வேண்டும்,கொழும்புக்கான பகல் சேவையை ஆரம்பிக்கவேண்டும் , எரிபொருள் செலவிலும் பார்க்க குறைந்த வருமானத்தை ஈட்டும் சேவையை மட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் இல்லாவிட்டால் 12 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் பருத்தித்துறை சாலை பணியாளர்களால் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply