தி.மு.க. தலைவா் தேர்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்

தி.மு.க. பொதுக்குழுவின் தலைவர் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடவுள்ள நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதேபோன்று, பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும் பொருளாளா் பதவிக்கு தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.

தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல் மாலை வரையில் மனுக்கள் பெறப்படவுள்ளன.

இதைத் தொடா்ந்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் தி.மு.க பொதுக்குழுவில் இது தொடர்பான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Leave a Reply