
கேகாலை ஆதார மருத்துவமனையில் பிளாஸ்ரிக் அறுவைசிகிச்சை மூலம் இளைஞர் ஒருவரின் முகத்திலிருந்து பிறப்பு வடு நீக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி உடகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இராணுவச்சிப்பாய்க்கே கேகாலை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆனந்தகுமார ஜயவர்தனவால் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்
இது சவாலான அறுவைசிகிச்சையாகும். இதனை சரியாக செய்ய முடியாது போயின் அவரின் முகம் சிதைந்துவிடும்.
குறித்த இளைஞர் தனது முகத்திலிலுள்ள இந்த பிறப்பு அடையாளத்தால் சமூகத்தை எதிர்கொள்ள முடியாத அவதிக்குள்ளாக்கப்படுகிறேன் எனத் தெரிவித்து சிகிச்சை பெற வந்தார்.
அதனையடுத்து அவருக்கு கடந்த 4ஆம் திகதி 2 மணிநேர பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மூலம் காலில் இருந்து தோல் எடுத்து முகத்தில் பொருத்தப்பட்டது. தற்போது நோயாளி ஆரோக்கியமாக உள்ளார்– என்றார்.



