சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட உடன் பாட்டு நிபந்தனைகள் சிறிலங்கா அரசு விரைவில் பூர்த்திசெய்யுமாயின் சிறிலங்கா அரசை கடனிலிருந்து முழுமையாக விடுபடக்கூடிய அடுத்த கட்ட நடவடிக்கையை சர் வதேச நாணய நிதியம் மேற்கொள்ளும் இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான மூத்த செயற் பாட்டு அதிகாரி மசாஹிரோ நொசாக்கி ஊடகமொன்றின் கேள்விக்குப் பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி 2.9 பில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை சர்வதேச நாணய நிதியம் பூர்த்தி செய்துள்ளது .
இந்த உடன்பாடு , 48 மாதங்களுக்கான செலுத்துகையைக் கொண்டுள்ளது .
இந்த உடன்பாடு நிறை வேற்றப்படுமானால் சர்வதேச நாணய நிதியத் தின் கொள்கையின்படி தற்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு நிர்வாகக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு , நிர்வாகக் குழு சிறிலங்காவுக்கு நிதியுதவிகளைச் செய்வதற்கு செயற்பாடுகளை முன்னெடுக்கும் .
அத்துடன் சிறிலங்காவை கடனிலிருந்து முழுமையாக விடுவிப்பதற் குரிய மேலதிக நடவடிக்கை களை முன்னெடுப்பதற்கு முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட உடன்பாட்டை சிறி லங்கா முதலில் பூர்த்தி செய்யவேண்டும் . அவ்வாறு பூர்த்திசெய்யுமாயின் அடுத்த கட்ட நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ளும் அதுவரை சர்வதேச நாணய நிதியம் காத்திருக்கும் என்றார்.
பிற செய்திகள்



