<!–
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செல்கின்ற பாதை சரியானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“ஒன்றாக எழுவோம் – களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் களுத்துறையில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முன்கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


