நாட்டில் சமையல் சிலிண்டர்கள் தீப்பற்றல், எரிவாயு அடுப்புகள் வெடித்துச் சிதறுதல் மற்றும் எரிவாயு அடுப்பையும், சிலிண்டர்களையும் இணைக்கும் குழாய்கள் வெடித்துச் சிதறுதல் என பல அனர்த்தங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், புதிதாகக் கொள்வனவு செய்யும் சிலிண்டர்களை திறந்தவுடன் பல குமிழ்கள் ஒரே நேரத்தில் வெளியே வருகின்றன.
இவ்வாறு புதிதாக கொள்வனவு செய்யும் சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டுச் செல்லும் நுகர்வோர், சீலை கழற்றி மூடியை திறந்தவுடன் குமிழ்கள் நிரம்பிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பில் காஸ் சிலிண்டர்களைக் கொள்வனவு செய்த கடை உரிமையாளர்களிடம் தெரிவிக்கும் போது,
தங்களால் ஒன்றும் செய்யமுடியாது. இவ்வாறான சிலிண்டர்களை மீளவும் பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனங்கள் தங்களுக்கு அறிவுறுத்தவில்லை என கையை விரித்துவிடுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.





