விளக்கமறியலில் உள்ள திலினியிடம் கைத்தொலைபேசி!!

திலினி பியூமாலியிடம் இன்று (திங்கட்கிழமை) காலை கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பண மோசடி குற்றச்சாட்டில் திலினி பியூமாலி, வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த தொலைபேசி கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *