யாழ். மாவட்டத்தில் பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரித்து 85 ரூபாவாக விற்பதெனவும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரச அதிபரின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பாணின் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததன் காரணத்தால் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரித்து 85 ரூபாவாக விற்பனை செய்ய உடன்பாடு எட்டப்பட்டது.
ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது என யாழ்.மாவட்டச் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு!





