போராட்டம் வெடிக்கும்- சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

குறிப்பிட்டதொரு தொழிலுக்கான ஓய்வுதிய வயதை நீடித்தார் அத்தகைய முடிவுகளுக்கு எதிராகப் போராட்டம் நடாத்தப்படும் என சுகாதார நிபுணர்களுக்கான கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பில் சுகாதார நிபுணர்களுக்கான கூட்டமைப்பிற்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அனைத்துப் பொதுத் துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக குறைக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில் சுகாதாரத்துறையில் குறிப்பிட்டதொரு தொழிலுக்கான இந்த முடிவை மாற்றியமைக்க அமைச்சரவைத் துணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அதன் பங்களிப்பை முற்றிலுமாக புறக்கணிக்கும் முயற்சிகளை சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

அனைத்து சுகாதாரத்துறை தொழில்களையும் சமமாக நடாத்தக்கூடாது என்ற அமைச்சரவையில் தீர்மானம் எடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply