வீட்டை உடைத்து வெங்காயத்தை ஆட்டையை போட்ட கில்லாடி திருடன்!

யாழில் வீடொன்று உடைக்கப்பட்டு 500 கிலோ வெங்காயம் களவாடப்பட்டுள்ளது.

உரும்பிராய் யோகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு வெங்காயம் திருடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள தோட்ட பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ளது , அந்த வீட்டினை வெங்காயம் சேகரித்து வைப்பதற்காக பயன்படுத்தி வந்த நிலையில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு சேகரித்து வைத்திருந்த 500 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply