<!–
156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை அம்பாறை நகர சபை மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன உட்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமத பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் .உயிர்நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும் பொலிஸாரும் இணைந்து அஞ்சலி செலுத்தவுள்ளதுடன் தேசிய கொடி மற்றும் பொலிஸாரின் கொடி என்பனவும் ஏற்றப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.




