கட்டைக்காட்டில் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்

கட்டைக்காடு பகுதியில் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது

யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்குட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்தன.

இந்த நிலையில், இன்றைய தினம் கட்டைக்காட்டில் உருக்குலைந்து நிலையில் மேலும் ஒரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது

இதையடுத்து மீனவர்களால் கிராம சேவகர் மற்றும் போலீசாருக்கு உடனடியாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply