
விவசாயிகளை கஷ்டத்திற்குள் தள்ளி தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று(12) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இரசாயன உர மானியத்தை முற்றாக நிறுத்திய அரசாங்கம் சேதன உரப் பாவனைக்கு விவசாயிகளை நிர்பந்தித்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியது.
சேதன உரப் பாவனையால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்வோம் என்ற அரசாங்கம் இதுவரை நட்ட ஈட்டை வழங்கவில்லை.
இரசாயன உரம், பீடை நாசினிகள், களை நாசினிகள், எரிபொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப் படவில்லை. தட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை. காலம் கடந்த உர விநியோகம்.
அறுவடை செய்யப்படும் உற்பத்திகளுக்கான சந்தை விலை நிலையாக பேணப் படவில்லை. மானிய உரத்தின் அளவும் பரப்பும் குறைக்கப் பட்டுள்ளன.
இவ்வாறான துன்பங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் விவசாயிகளை உள்ளாக்கி உற்பத்தியையும் உணவுப் பாதுக்காப்பையும் எப்படி இந்த அரசு உறுதி செய்ய போகின்றது?
எனவே தொடர்ந்தும் கஸ்டங்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்கின்ற விவசாயிகள் வீதிக்கு இறங்க முன்னர் இப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு அரசிடம் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்



