சுகாதார அமைச்சர் தனது பதவியை இழக்க நேரிடும்: சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சருக்கு தனது அமைச்சு பதவியை இழக்க நேரிடும் எனவும், பிரச்சினை எல்லை மீறுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார்.

இன்று காலை கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரத் துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பராக்கிரமபாகு மன்னனுக்கு பின் நானே நாட்டை அரிசியில் தன்னிறைவடைய செய்தேன்! திஸாநாயக்க

Leave a Reply