‘சைவசமய வாழ்வியல் முறைமையில் இயற்கை மேலான்மை’ எனும் தலைப்பில் 2021ஆம் ஆண்டுக்கான ஆய்வரங்கு யாழ். சாவகச்சேரி கலாச்சார மன்றத்தில் இன்று நடைபெற்றது.
மக்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தலைமை உரையை பேராசிரியர் முனைவர் ச.மனோன்மணி வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், பேராசிரியர் முனைவர் ச.மனோன்மணி, வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முதுநிலை விரிவுரையாளர் ச.பத்மநாதன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் உச சுபலிங்கம், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், சச்சிதானந்தம், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அரசுக்குள் பல்வேறு கொள்கைகள், உரையாடல்கள் ஏற்பட வேண்டும்! டலஸ் அழகப்பெரும




