மகளிருக்கான ஆசியக்கிண்ணம்: இந்தியாவை வீழ்த்த்தி வாகை சூடுமா இலங்கை!

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி நடைபெறுகின்றது.

இதில் இலங்கை அணிக்கு சாமரி அத்தபத்துவும் இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கௌரும் தலைமை தாங்கவுள்ளனர்.

இத்தொடர் ஆரம்பமானது முதல் 4 முறை இறுதி போட்டி வரை முன்னேறியுள்ள இலங்கை அணி, இந்தியாவிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தது. தற்போது மூன்;று தொடர்களுக்கு பிறகு தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு இத்தொடர் ஆரம்பமானது முதல் தொடர்ந்து 6 முறை இந்திய மகளிர் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Leave a Reply