வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ். சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) சுன்னாகத்தில் ஆரம்பமான பேரணி சுன்னாகம் பஸ் தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது.

இதனை வாழ்வகம் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகிய இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்திருந்தது.

மேலும் இதன்போது வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவம், விழிப்புலனற்றவர்கள் வீதியில் நடமாடுவதற்கு இருக்கின்ற இடையூறுகள், அவர்களை ஏன் முன்னுரிமைப்படுத்த வேண்டும் போன்ற விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply