T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கை – நமீபியா அணிகள் மோதல்

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை – நமீபியா அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

அவுஸ்ரேலியாவின் கீலோங்கில் உள்ள சீமன்ட்ஸ் மைதானத்தில் இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரின் முதல் போட்டி நடைபெறுகின்றது.

இலங்கை அணிக்கு தசுன் ஷானகவும், நமீபிய அணிக்கு ஜெராட் எரஸ்மஸ்ம் தலைமை தாங்குகின்றனர்.

இலங்கை அணியினர் ஆசியக் கிண்ண வெற்றியை சுவைத்த நிலையில் பிறிதொரு தொடரை எதிர்கொள்கின்றனர்.

16 நாடுகள் இந்த வருட சுற்றுப்போட்டியில் இணையவுள்ளதுடன், இலங்கை உட்பட 08 நாடுகள் இன்று முதல் சுற்றுப் போட்டிகளுக்காக நேருக்கு நேர் மோதவுள்ளன.

Leave a Reply