
கல்முனை #தரவைகோயில்வீதி போன்று, சம்மாந்துறை, பாண்டிருப்பு வீதி பெயர்களை மாற்ற முயற்சி.
சந்திரநேரு சந்திரகாந்ன் கண்டனம் –

மிக பழமையான சம்மாந்துறை கோரக்கர் ஆலயமும், #கோரக்கர்தமிழ்மகாவித்தியாலயம் அமைந்துள்ள #கோரக்கர் வீதியை பெயர் மாற்றம் செய்ய முயற்சி நடக்கிறதா என்கிற சந்தேகம் இந்த பள்ளி வாசல் பெயர் பலகையில் உள்ள வீதி பெயரில் இருந்து எழுகிறது.
கடந்த காலங்களில் இவ்வாறுதான் கல்முனையில் இனங்களுக்கு இடையில் அரசியல் செய்ய தரவை பிள்ளையார் கோயில் வீதி எனும் பெயரை கடக்கரை பள்ளிவாசல் வீதி என்று மாற்ற முயற்சி செய்தனர். ஆரம்பத்தில் அந்த வீதிகளில் இருந்த கடைகள் பெயர் பலகையில் வீதியின் பெயரை மாற்றினர், பின்னர் கிராம சேவகர் உதவியுடன் தேசிய அடையாள அட்டையில் மாற்றம் செய்தனர். வியாபார பதிவுகள் என்று அனைத்து விடயங்களிலும் மாற்றம் செய்து விட்டனர். ஆனால் சட்டபூர்வமாக மாற்ற முடியவில்லை. ஆரம்பத்தில் விட்ட தவறுகள் இன்று வரை துரத்துகின்ற துரோகங்களாக இரு இனங்களுக்கிடையில் மாறிப்போயிருக்கிறது.
இதுபோல் கல்முனை பாண்டிருப்பில் மருதமுனை எல்லையான செட்டியார் வீதி அல்மினால் பாடசாலை வீதியாக மாறி வருகிறது. சமூகஅமைப்பான கல்முனை இளைஞர் சேனை மற்றும் ஒன்றியம், பாண்டிருப்பு இளைஞர்கள் இவ் விடயத்தில் கவனமெடுப்பது ஆரோக்கியமானதாகும்.
ஆகவே “எமது அடையாளத்தை அழிக்க எமது கலாச்சாரத்தை மட்டும் அழிக்க வேண்டும் என்றில்லை. எமது இருப்பையும், முகவரியையும் அழித்தால் போதும்.”
விழித்து கொள்ளுங்கள்.
சத்தமில்லாமல் நடந்தேறும் சம்மாந்துறை மற்றும் பாண்டிருப்பு வீதிகளின் பெயர் மாற்றம் இனங்களுக்கு இடையில் கசப்பையே உண்டு பண்ணும்.
நன்றி.



